அமைச்சர் மஹிந்த அமரவீர – சபீஸ் சந்திப்பு !

 

 

சப்றின்

 

அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கடற்தொழில் நீரியல் வளங்கள்  அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவை அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் எஸ் எம் சபீஸ் சந்தித்துப் பேசியதற்கிணங்கவே மீனவர்களுக்கு தீர்வு கிட்டியுள்ளது.

image (1)_Fotor

இப்பிராந்தியக் கடற்பரப்பில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் தொழில் புரிந்து வருகின்றனர். இவர்களது வாழ்க்கைத் தரம் ஏனைய பிராந்தியத்தில் வாழும் மீனவர்களுடன் ஒப்பிடும்போது பின்தங்கிய நிலையிலையே காணப்படுகிறது.  இப்பகுதி கடற்பரப்பில் அரைப் பகுதிக்கு மேல் கூரான மலைக் குன்றுகள் காணப்படுவதன் காரணமாக  மீனவர்களின் வலைகள் சேதப்படுத்தப்படுகின்றன. இதன்  விளைவாக   கடல்வளத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளதே இதற்கு  முக்கிய காரணமாகும். 

கடந்த காலங்களில் இக்குறைகளை நிவர்த்தி செய்வதற்கான கள ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப் பட்டிருந்தமையும் இங்கு சுட்டிக் காட்டப்பட்டது. 

இதனை விரிவாக  கேட்டறிந்த அமைச்சர், அமைச்சின் கீழ் இயங்கும் நாரா நிறுவனத்தின் அதிகாரியை அழைத்து இக்கடற்பரப்பில் காணப்படும்  கற்களை வெட்டி அகற்றுவதற்குரிய  நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கினார்.  மேலும் எஸ் எம் சபீசால் வேண்டிக்கொள்ளப்பட்ட 25 x 60 பரப்புடைய மீனவர்கள் இளைப்பாறும் கட்டடங்களை இவ்விரு ஊர்களிலும் அமைப்பதற்கும் இவ்விரு பிராந்தியங்களையும் இணைப்பதற்கான கடலோரப் பாதையினை முடிவுருத்தித் தருவதற்கும்  விரைவில் நடவடிக்கை மேற்கொள்வதாகவும்   உறுதி அளித்துள்ளார்.