vk;. vg;. nkh`kl;
இலங்கை கைத்தொழில் மற்றும் வர்த்தக சம்மேளனத்தின் (Federation of Chambers of Commerce and Industry of Sri Lanka) 19ஆவது புதிய தலைவராக சரத் கஹபொலஆரச்சி அண்மையில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். களுத்துறை வர்த்தக சம்மேளனத்தை பிரதிநிதித்துவப்படுத்திய இவருக்கு இத்துறையில் 14 வருட அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முன்னாள் சிரேஷ்ட உப தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.
சர்வதேச வியாபரத்துடன் ஒப்பிடும் போது இலங்கை, சுமார் 20 வருட காலம் பின்னடைவில் உள்ளதாகவும், சர்வதேச வர்த்தகத்துடன் போட்டியிட்டு அதில் வெற்றி பெற தாம் எண்ணியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கடமைகளைப் பொறுப்பேற்றபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.