நிறைவேற்று அதிகாரமுறை தொடர்ந்தும் நீடிக்கவேண்டும் என்பவர்கள் இன்னொரு யுத்தத்தை எதிர்பார்க்கலாம் !

நிறைவேற்று அதிகாரமுறை தொடர்ந்தும் நீடிக்கவேண்டும் எனசிலர் விரும்பினால் அவர்கள் இன்னொரு யுத்தத்தை எதிர்பார்க்கலாம் என தெரிவித்துள்ள ஜனாதிபதி நாட்டில் மீண்டும் தீவிரவாத சக்திகள் செயற்பட தொடங்கியுள்ளதாகவும் அவர்கள் நாட்டை ஸ்திரதன்மையிழக்க செய்வதற்கு முயல்கின்றனர் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

maithripala
பாராளுமன்றத்தை அரசியல் நிர்ணயசபையாக முன்மொழியும் தீர்மானத்தின் மீது சற்று முன்னர் விசேட உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மக்களை குறிப்பிட்ட தீவிர வாதசக்திகள் குறித்து எச்சரிக்கையாகயிருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ள அவர் வடக்கிலோ தெற்கிலோ தீவிரவாதத்திற்கு இடமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசமைப்பைஉருவாக்கும் முயற்சிகளிற்கு பின்னால் வெளிநாடுகள் உள்ளதாக முன்வைக்கப்படும் கருத்தை நிராகரித்துள்ள அவர் புதிய அரசமைப்பு உருவாக்கத்திற்கான யோசனைகளின் ஓரு பகுதியாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை முற்றாக ஓழிக்கப்படுவதும் காணப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சிலர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையே யுத்தத்தை முடிவிற்குகொண்டுவருவதற்கான காரணம் என தெரிவிக்கின்றனர் நான்; நிறைவேற்று அதிகாரமுறை தொடர்ந்தும் நீடிக்கவேண்டும் எனசிலர் விரும்பினால் அவர்கள் இன்னொரு யுத்தத்தை எதிர்பார்க்கலாம் என நினைக்கின்றேன்,நிறைவேற்று அதிகார முறை குறித்து கவனம் செலுத்துவதற்கு பதில் இன்னொரு யுத்தத்தை தவிர்ப்பது குறித்து கவனம் செலுத்தலாம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.