இந்த நிலமானது, துார பிரதேசங்களில் உள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு தங்குவதற்கு விடுதி அமைப்பதற்காக வழங்கப்பட்ட இடமாகும்.
முன்னாள் ஜனாதிபதியான சந்திரிக்காவினால் குறித்த நிலம் கம்பஹா பிரதேசத்தில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த விடயம் சம்பந்தமாக கடந்த வாரம் கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவரும் பிரதி சபாநாயகருமான திலங்க சுமதிபால ஊடக சந்திப்பில் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன்போது, நான் பாராளுமன்றத்தில் பல தடவைகள் நிலம் தொடர்பாக கதைத்துள்ளேன். இலங்கையிலே உலகின் அதிக திருட்டு சம்பவம் நிகழ்வதாக கூறும் அர்ஜுன ரணதுங்க இவ்விடயம் பற்றி எதுவும் கதைக்காதது ஏனோ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் அந்த இடத்துக்கான பணத்தை அர்ஜுன ரணதுங்க அபகரித்துவிட்டார் எனவும் இதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் திலங்க சுமதிபால மேலும் தெரிவித்துள்ளார்.