இலங்கையரை அச்சுறுத்திய பிரித்தானிய பொதுத்தேர்தல் வேட்பாளர் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்!

briton பிரித்தானியாவின் நாடாளுமன்ற வேட்பாளர் ஒருவர் அவரது கட்சியில் இருந்து உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

 கொன்சவேட்டிவ் கட்சியின் வேட்பாளரான இலங்கை வம்சாவளி ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே ரொபட் பிலே என்ற இந்த வேட்பாளர் இடைநிறுத்தப்பட்டுள்ளார் என்று டெய்லி மிரர் தெரிவித்துள்ளது. 

  வடகிழக்கு ஹம்செயார் பகுதியின் கொன்சவேட்டிவ் கட்சியின் வேட்பாளரான ரணில் ஜெயவர்த்தனவுக்கே இவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

 ரணில் ஜெயவர்த்தன, பிரித்தானியாவில் முதல் ஆசிய நாடாளுமன்ற உறுப்பினராக வர வாய்ப்பிருக்கிறது.

 இந்தநிலையில்,  ரணில் ஜெயவர்த்தன  மீது துப்பாக்கியால் சுடுவேன் என்று பிலே பிரசாரக் கூட்டம் ஒன்றின் போது எச்சரித்திருந்தார்.

இது தொடர்பான காணொளியும் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே ரணில் ஜெயவர்த்தன போட்டியிடும் வடகிழக்கு ஹம்சயார் பகுதியில் கொன்சவேட்டிவ் கட்சி 18,500 வாக்குகளால் கடந்த தேர்தலிலும் முன்னிலை வகித்தமை குறிப்பிடத்தக்கது.