கோத்தபாயவுக்கு எதிராக முறைப்பாடு !

 kotha  தேசத்துக்கு மகுடம் (தெயட்ட கிருள) கண்காட்சியின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் (ஜே.வி.பி) இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, அம்பாறை மாவட்ட முன்னாள் செயலாளர் மற்றும் அம்பாறை நகரசபைத் தலைவர் ஆகியோருக்கு எதிராகவே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.