நிஸ்மி
அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் ஜனாதிபதியாகப் பதவியேற்று ஆரம்பித்த நல்லாட்சிக்கு ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாட்சி வேண்டி நடாத்தப்படும் மத வைபவங்களும், மர நடுகை நிகழ்வும் இன்று (08) அம்பாரை மாவட்டத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இத் திட்டத்திற்கு அமைவாக அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதான வைபவம் பிரதேச செயலலக முன்றலில் உதவிப் பிரதேச செயலாளர் அஷ்- ஷேய்க் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது உதவித் திட்டமிடல் பணிப்பாளர்களான ஏ.எம்.தமீம், ஏ.எல்.ஹுஸைனுதீன், நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.பாறூக், கணக்காளர் எம்.ஐ..எம்.முஸ்தபா, திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் எம்.ஏ.எம்.இமாமுதீன் உட்பட பிரதேச செயலக சகல பதவி நிலை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
உதவிப் பிரதேச செயலாளர் அஷ்- ஷேய்க் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நல்லாட்சியின் சிறப்பு பற்றி உரையாற்றினார். அத்துடன் அக்கரைப்பற்று பட்டினப்பள்ளி வாயல் பேஷ்-இமாம் எம்.ஐ.எம்.பைஸல் அவர்களினால் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களுக்கும், நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி விஷேட துஆப் பிரார்த்தனை நடாத்தப்பட்டதுடன் மர நடுகை வேலைத் திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
உதவித் திட்டமிடல் பணிப்பாளர்களான ஏ.எம்.தமீம், ஏ.எல்.ஹுஸைனுதீன், நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.பாறூக், கணக்காளர் எம்.ஐ..எம்.முஸ்தபா, திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் எம்.ஏ.எம்.இமாமுதீன் ஆகியோர்களும் மரக் கன்றுகளை நாட்டி வைத்தனர்.