எஸ்.எம்.அறூஸ்
கிழக்கு மாகாணத்தில் றக்பி விளையாட்டை அபிவிருத்தி செய்து தேசிய மட்டத்தில் சிறந்த வீரர்களை உருவாக்குவதற்கான வேலைத்திட்டத்தை இலங்கை றக்பி உதைபந்தாட்ட சங்கம் மேற்கொண்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான றக்பி பயிற்சி முகாம் நேற்று (2016-01-07) பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் றக்பி விளையாட்டு இணைப்பாளர் ஐ.எல்.எம்.பாயிஸ் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமில் பிரதம அதிதியாக இலங்கை றக்பி உதைபந்தாட்ட சங்கத்தின் விளையாட்டு அபிவிருத்தி முகாமையாளர் தனுஜா குலதுங்க கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அக்கரைப்பற்று கல்வி வயத்திற்குட்ட 10 பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 200 மாணவர்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர்.
அக்கரைப்பற்று கல்வி வலய உடற்கல்விப் பிரிவு உதவிக் கல்விப்பணிப்பாளர் எஸ்.எம்.ஜெமீலின் பங்குபற்றுதலுடன் பயிற்சியாளர்களான எம்.ஐ.எம்.அஸ்ரப், சுஜானி ரத்னாயக்க,சுபாசினி கருணாரத்ன,ஆர்.பிரியதர்சினி, நில்மினி வீரசிங்க ஆகியோர் பயிற்சிகளை வழங்கினர்.
இப்பயிற்சியின் இறுதியில் பங்குபற்றிய சகல பாடசாலைகளுக்கும் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான றக்பி விளையாட்டு உபகரணங்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.