திருடர்கள் பிடிபட்டனர் !

அசாகிம் 

 

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வீதியால் சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்து தங்க மாலையை பறித்துக் கொண்டு சென்ற இளைஞரையும் அதனை அடகு வைக்க உதவிய இளைஞருமாக இருவரை சம்பவம் நடந்து ஒரு மணித்தியலத்திற்குள் பொலிஸார் கைது செய்த சம்பவம் நேற்று (07.01.2016) 02.00 மணியளவில் இடம் பெற்றதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.

01_Fotor
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கண்ணகிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெண் தனது வீட்டுக்குத் தேவையான பொருட்களை சந்தையில் கொள்முதல் செய்து கொண்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போது வீட்டிற்கு அருகில் வைத்து முகம் மூடிய தலைக்கவசத்தை அணிந்த இளைஞர் பாசிக்குடாவிற்கு செல்லும் வழி எது என்று கேட்டு என்னிடம் கதை கேட்டதாகவும் தான் வழியை காட்டவும் மோட்டார் சைக்கிளில் வந்தவர் என்னை அவரது காலால் தள்ளிவிட்டார் பிறகு தவறுதலாக பட்டு விட்டது என்று சொல்லி என்னை தூக்குவது போல் நடித்து எனது தங்க மாலையை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டார் என்று பாதிக்கப்பட்ட பெண் மோட்டார் சைக்கிள் இலக்கத்தை தெரிவித்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

03_Fotor
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எடுத்துக் கொண்ட துரித நடவடிக்கையின் பயனாக மாலையை பறித்த சந்தேக நபரும் அடகு வைக்க உதவிய அவரது நண்பரும் வாழைச்சேனை பிரதான வீதியில் உள்ள தனியார் வங்கியில் மாலையை அடகு வைப்பதற்கு இருந்த சமயம் சந்தேக நபர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மூன்றரை பவுன் எடைகொண்ட தங்க மாலையையும் திருடுவதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் என்பவற்றையும் கைப்பற்றுயள்ளனர்.

 
19 வயது இளைஞர்களான சந்தேக நபர்கள் இருவரும் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும்இவர்களை இன்று (08.01.2016) வாழைசசேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.