மஹிந்த ராஜபக்ச கலந்துகொள்ளவில்லை !

ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததனை முன்னிட்டு நாடு பூராகவும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடாகி நடைபெற்று வருகின்றன.

இந்த நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச கலந்துகொள்ளவில்லை என அவரது ஊடக பேச்சாளர் ரோஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ச இன்று கண்டி அஸ்கிரிய விகாரைக்கு செல்லவுள்ளமையினால், அவர் கண்டி பிரதேசத்தில் உள்ளார் என ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் ஓராண்டு நிகழ்விற்கு மஹிந்தவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா என வினவிய போது, தனக்கு தெரிந்தவரை அவ்வாறான அழைப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இது தொடர்பான தேசிய நிகழ்வு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்று வருகின்றது.