சஹிஹுல் புகாரி , பாடம் : 15 ,
எவ்வளவு தொலைவிலிருந்தால் ஜுமுஆத் தொழுகைக்கு வரவேண்டும்? யார்மீது (ஜுமுஆத் தொழுகை) கடமையாகும்? ஏனெனில் அல்லாஹ் கூறுகின்றான்: (இறை நம்பிக்கை கொண்டவர்களே!) ஜுமுஆவுடைய நாளில் தொழுகைக்காக (நீங்கள்) அழைக் கப்பட்டால், வியாபாரத்தை விட்டு அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிகளுக்கு) விரைந்து செல்லுங்கள்.
(63:9) ஜுமுஆத் தொழுகை நடைபெறும் ஊரில் நீ இருந்து அந்த ஜுமுஆ நாளில் தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டால் அதில் கட்டாயம் நீ கலந்து கொள்ள வேண்டும். பாங்கு சப்தத்தை நீ கேட்டாலும் சரி,அதை நீ கேட்காவிட்டாலும் சரி என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். அனஸ் (ரலி) அவர்கள் சில நாட்களில் தமது மாளிகையில் (தங்கி) இருக்கும் போது (தம்முடன் இருப்பவர்களுக்கு) ஜுமுஆத் தொழுவிப்பார்கள். சில நாட்களில் ஜுமுஆத் தொழுவிக்க மாட்டார்கள். ளஅனஸ் (ரலி) அவர்களதுன அந்த மாளிகை (பஸ்ரா நகரிலிருந்து) இரண்டு பர்ஸக் (சுமார் ஆறு மைல்) தொலைவிலிருந்த ஸாவியா எனும் இடத்தில் இருந்தது.
902. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.(மதீனாவுக்கு நான்கு மைல் தொலைவிலுள்ள) மேட்டுப் பகுதியிலிருந்தும் தங்கள் இல்லங் களிலிருந்தும் மக்கள் ஜும்ஆ நாளில் முறை வைத்து (மதீனாவுக்கு) வந்து கொண்டிருந்தார்கள். புழுதிகளில் அவர்கள் நடந்து வருவதால் அவர்கள் மேல் புழுதி யும் வியர்வையும் படிந்து விடும். அவர்களிடமிருந்து வியர்வை வெளியேறும். (இந்த நிலையில்) அவர்களில் ஒருவர் நபி(ஸல்) அவர்கள் என்னுடனிருக்கும்போது வந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘இந்த தினத்துக்காக நீங்கள் தூய்மையாகிக் கொள்ளக் கூடாதா? என்று கேட்டார்கள்.