இலங்கையின் வடகிழக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லீம்களின் வாழ்வியல் ஒழுங்கு வடகிழக்கு முஸ்லீம்களை விடவும் வித்தியாசமானது.அதில் அவர்களது இனக்கலப்பு அமைவிடமே பெரும்தாக்கத்தை செலுத்துகிறது.
இவர்கள் மிகக் கவனமாக நடந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
பேரினவாதம் என்கின்றது இலங்கையின் வடகிழக்குக்கு வெளியே சில வேளைகளில் தமது இரும்புக் கரம் கொண்டு முஸ்லீம்களை நெருக்கி இருக்கிறது.இது தொடர்ச்சியான வரலாறு
ஆனாலும் வடகிழக்கிலே இடம்பெற்ற குடியேற்றங்கள் நில அபகரிப்பு என்பன அவற்றை விட கொடுரமானது.
கடந்த ஆட்சியின் போது மகிந்த ராஜபக்ச அரசாங்கம்
1.பேரினவாதத்தை வளர்த்து உரமூட்டியது தம்புள்ளை தொடங்கி அழுத்கம வரைக்கும் எம் இனத்துகெதிரா
ஞானசார தேரரினாலும் இனவாத குழுக்கலாலும் இடம் பெற்ற வன்முறை தொடர்பில் அதிர்ப்தியுற்றிருந்தோம்.
2.பொதுவாக கடத்தல், ஊழல்,அதிகார துஷ்பிரயோகம் போன்ற காரணிகளும் தாக்கம் செலுத்தின.
இவை இடம்பெறும் போது அனைத்து முஸ்லீம் கட்சிகளின் தலைவர்களும் மகிந்த ராஜபக்ச வுடன் இருந்தனர்.
ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறி தென்பட்டவுடன் ஒவ்வொரு தனிப்பட்ட காரணங்களுக்காக “நல்லாட்சியை”உருவாக்க களத்தில் இறங்கினர்.
அதாஉல்லாஹ் மிகவும் தெளிவாக சொன்னார் இது ஆட்சி மாற்றம் நிகழ்வதற்க்கு சர்வதேசம் செய்கிற திட்டமிட்ட சதி.
நாம் என்ன செய்தோம் சேலை முதல் காவியுடைவரை அதாஉல்லாஹ்க்கு அணிவித்து அலங்கரித்தோம்.இலகுவாக கிடைக்கின்ற சமுக தூரோகி பட்டமும் கட்டினோம்.
அவ்வாறு இருந்ததால்தான் அதாஉல்லாஹ் தான் வகித்து வந்த பாரளுமன்ற கதிரையையும் இழந்தார்.
இன்று என்ன நடந்தது நல்லாட்சியில்?
1.பேருவளை அழுத்கம சம்பவங்களின் போது களத்தில் இறங்கி நின்ற ஞானசாரவும் வன்முறை கும்பலும் கைது செய்ய பட்டனரா? இல்லை
2.நல்லாட்சியின் போதே எமது புனித குர்ஆனை தடை செய்ய கோரிய பொதுபலசேனா அமைப்புக்கு எதிரான நடவடிக்கை கள் ஏதும்?
3.ஊடகவியலாளர்கலான பிரகத், லசந்த போன்றவர்களுடைய கொலை கடத்தல் தொடர்பில் ஏதும் இடம் பெற்றதா?
4.நேற்று இரவு தொழுகை முடித்து வந்த முஸ்லீம் கள் மீது தாக்குதல் வெள்ளம்பிட்டி பிரதேசத்தில் இடம் பெற்றதே எமது தலைவர்களோ ஊடகங்களோ எதும் பேசிதா?
5.கிழக்கிலே இருக்கின்ற காணி, சுனாமி வீட்டுத்திட்டம் போன்ற பிரச்சினை களுக்கான எதாவது முன்னெடுப்பு
இப்போது வாருங்கள்
மகிந்தவுக்கு ஒரு போதும் பெரும்பான்மை யான முஸ்லீம்கள் வாக்களிக்கவில்லை. முதல் தேர்தலில் UNP யோடும் இரண்டாவது முறை அன்னத்தோடும் மூன்றாவதாக நல்லாட்ச்சிக்காக முழுமையாகவும் நின்றோம்.
இது நாம் உருவாக்கிய ஆட்சி இதிலே எமது குரலை உயர்த்த எமது தலைவர்களால் முடியாமல் போகிறது
இப்போது காவியுடையும், சேலையும் யாருக்கு கட்ட வேண்டும். என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.
பிள்ளையானும் அவரது அணியும் சட்டத்தின் முன் தமிழ் கைதிகள் விடுவிப்பு பல்லாயிரக்கணக்கான வீடுகள் பகிர்ந்தளிப்பு எதிர்கட்சி தலைமை முக்கிய தமிழ் தலைவர்களது படுகொலைகள் தொடர்பான விசாரணை
என்பன தமிழ் சமுகத்தினுடைய தலைமைகளால் வென்றெடுக்கப்பட்டு இருக்கிறதே இவர்களால் ஏன் முடியாமல் போனது இவர்கள் சமுகத்தை காட்டி ஆட்சியாளர்களிடம் எதிர்பார்த்தது என்ன?
இன்னுமா புரியவில்லை.
அஸ்மி அப்துல் கபூர்