இலங்கை வர உள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர்!

7fcb1e30-4a71-49af-b7e8-2bed10a717d1_S_secvpf

இந்தியா-இலங்கை உறவு, இலங்கை தமிழர்களின் மறு குடியேற்ற பிரச்சினை, ராணுவ முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் பிரச்சினை ஆகியவை பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இலங்கை வர உள்ளார். 

அதற்கு முன்னதாக, அவரது பயணத்துக்கான முன் ஏற்பாடுகள் குறித்தும், மீனவர்கள் பிரச்சினைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் இலங்கை வர இருப்பதாக டெல்லியில் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், இலங்கை மீன்வளத்துறை  அமைச்சர் மகிந்த அமரவீர  கொழும்பு நகரில் நிருபர்களிடம் பேசுகையில், மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் வருகிற 10-ந் தேதி கொழும்பு வர இருப்பதாக தெரிவித்தார்.