எஸ்.அஷ்ரப்கான்
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் அயராத முயற்சியினால் “அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது கோட்டக்கல்விப் பிரிவில் தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலைகளுக்கு பிரதி அமைச்சர் இன்று (07) திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.
இதனடிப்படையில் கமு/கமு/அல்-ஜலால் வித்தியாலயம், கமு/கமு/லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் வேலைத்திட்டங்களை பார்வையிடும் பொருட்டே விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரிஸ் திடீர் விஜயம் மேற்கொண்டு அபிவிருத்தி சம்மந்தமான கலந்துரையாடல்களை நடாத்தி இரு பாடசாலை அதிபர்களிடமும் திட்ட வரைபுகள், வளப்பற்றாக்குறை, இதர பாடசாலைத் தேவைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டதுடன், அதற்கான அறிவுறுத்தல்களையும் அதிபர்களுக்கு வழங்கியிருந்தார்.
இப்பாடசாலைகளின் அபிவிருத்தி மிகவிரைவில் கல்வி அமைச்சின் “அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பூர்த்தி செய்வதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை தான் மேற்கொண்டு வருவதாக பிரதி அமைச்சர் ஹரீஸ் அங்கு குறிப்பிட்டார்.