(வீடியோ).,உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய மறுபரீசீலனை மீதான தேசிய செயலமர்வு….!

 

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்

 

வீடியோ, சிரேஸ்ட ஊடகவியலாளர் என்.எம்.அமீனின் கருத்து:- youtube.com/watch?v=puG03TIhU_0&feature=youtu.be

ameen

தற்பொழுது வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள  உள்ளூரட்சி மன்ற நிர்ணயம் தொடர்பிலுள்ள சிக்கல்களை ஆராய்ந்து அதில் திருத்தங்களை முன்மொழிய நியமிக்கப்பட்டுள்ள விசேட குழு முன்னிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே (அதாவது தென் பிராந்தியத்தில்) வாழும் முஸ்லிம்களின் உள்ளூராட்சிமன்ற பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படும் வகையில் தேசிய மட்டத்திலான ஒரு பரீசீலிணையினை மேற்கொண்டு பூரணமான ஒரு அறிக்கையினை சமர்பிக்க அகில இலங்கை முஸ்லிம் வாலிப முன்னணிகள் சம்மேளனம் (ACUMLYF). தீர்மானித்துள்ளது. 

(ACUMLYF) தலைவர் காலாநிதி பி.எம்.பாறூக் தலைமையில் அதன் பிரதி தலைவர் அல்-ஹாஜ் எஸ்.லுக்மான் சஹாப்டீன், பொதுச் செயலாளர் முகம்மது அஜிவதீன், முன்னாள் தலைவர்களான அல்-ஹாஜ் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், அல்-ஹாஜ் என்.எம்.அமீன், சட்டத்தரணி என்.எம்.சஹீட், சட்டத்தரணி அல்-ஹாஜ் ரசீத் எம். இம்தியாஸ் மற்றும் ஏனைய நிறைவேற்று குழு உறுப்பினர்கள் மற்றும் துறை சார் நிபுணர்களினதும் பங்களிப்புடன் இடம்பெற்ற உப குழுக்கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக முன்னாள் (ACUMLYF) யின் தலைவரும்,சிறீலங்கா முஸ்லிம் மீடீயா போரத்தின் தலைவருமான என்.எம்.அமீன் தெரிவித்தார்.

மேல் மத்திய தென் வடமேல், வடமத்திய , ஊவா மற்றும் சப்ரகமுவ ஆகிய ஏழு மாகானங்களுக்கும் சென்று அப்பிரதேச உள்ளூராட்சி மன்ற அங்கத்தவர்கள்,அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை சந்தித்து கிராமிய மட்டத்திலான தகவல்களை சேகரித்து மக்களை வழிகாட்டும் நிகழ்ச்சி திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதன் ஆரம்ப பணியாக குற்இத்த மாகாணங்களில் உள்ளூரட்சி மன்றங்களில் தற்பொழுது அங்கத்துவம் வக்கிக்கும் அனைத்து கட்சிகளினதும் முஸ்லிம் உறுப்பினர்கள் அடங்களாக குறித்த மாவட்டங்களை பிரதி நிதித்துவப்படுத்தும் முக்கிய சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகளையும் ஒன்று திரட்டி உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயம் பற்றிய தேசிய செயலமர்வு இன்சா அல்லாஹ் இந்த மாதம் 23ம் திகதி சனிக்ழமை மு.ப.9.30மணி தொடக்கம்பி.ப.2மணி வரை கொழும்பில் நடாத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே இந்த தேசிய மற்றும் பிராந்திய செயலமர்வுகளில் பங்கேற்று பணியாற்ற விரும்புவர்கள் தமது பெயர் மற்றும் தொடர்பு இலக்கங்களை 0777274900 (திரு உத்தியோகத்தர்) 0777314207( உப குழு தவிசாளர்) 0714422146 ( செயலாளர்) ஆகிய இலக்க்கங்களுடன் SMS முன்பதிவு செய்துகொள்ளுமாறு வேண்டப்படுக்கின்றனர். மேலதீக விபரங்களுக்கு (ACUMLYF) தலைமையகம் மற்று பிராந்திய பணிப்பாளர்களைத் தொடர்புகொள்ளுமாறு முன்னாள் தலைவர் என்.எம்.அமீன் வேண்டிக்கொள்கின்றார்.

இது சம்பந்தமாக முன்னாள் (ACUMLYF) யின் தலைவரும்,சிறீலங்கா முஸ்லிம் மீடீயா போரத்தின் தலைவருமான என்.எம்.அமீன் தெரிவித்த கருத்துக்களின் காணொளியானது எமது வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.