புதிய அரசியல் கட்சி ஒன்றை பதிவு செய்வது தொடர்பில் பொது பலசேனா அமைப்பிற்கும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய விற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
இன்று காலை 10 மணியளவில் இச்சந்திப்பை நடத்த பொதுபலசேனா அமைப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றுக் காலை பொதுபலசேனாவின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கட்சியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதானகே இச்செய்தியை வெளியிட்டு ள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
கட்சி ஒன்றை பதிவு செய்வது தொடர்பில் பல்வேறு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாகவே இன்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுடன் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கட்சியை பதிவு செய்வது தொடர்பில் காலதாமதங்கள் ஏற்படலாம். எனினும் கட்சியின் செயற்பாடுகளை மிக விரைவில் முன்னெடுக்கவுள்ளோம்.
எது எவ்வாறு இருப்பினும் எமது கட்சியுடன் இணைந்து செயற்பட நாட்டில் உள்ள பல தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் யாரென்பது குறித்து பின்னர் தெரியப்படுத்துவதாகவும் தெரிவித்தார். பொதுபலசேனா அமைப்பு அப்படியே இருக்கின்ற நிலையில் புதிதாக அரசியல் கட்சியொன்றே பதிவு செய்யப்படும் என்றும் டிலந்த விதானகே தெரிவித்தார்.