அரசாங்கத்தின் கன்னி வரவு செலவுத் திட்ட யோசனை இந்த ஆண்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
எனவே, இந்த ஆண்டு அமைச்சரவையில் மாற்றங்கள் செய்வதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள விரும்பும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு மட்டும் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர் பதவிகள் வழங்கப்படவுள்ளன.
தற்போது அமைச்சுப் பதவி வகித்து வரும் எந்தவொரு அமைச்சரின் பதவியிலும் மாற்றம் ஏற்படாது என தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்குவது குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துரையாடி தீர்மானிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.