150 பேரில் 2 பேருக்கு மார்பகப் புற்றுநோய் : வைத்தியர் கே.எல்.எம்.நக்பர் !

அபு அலா 

 

அட்டாளைச்சேனையில் மேற்கொள்ளப்பட்ட இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனையில் 2 பேருக்கு மார்பக புற்றுநோய் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டதால் அவர்களை மேலதிக சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள் வழங்கி வைத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.

DSC04438_Fotor

அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையின் இவ்வருடத்துக்கான தொற்றா நோய் சிகிச்சையின் முதல் நாள் வைத்திய சிகிச்சை ஆரம்பம் இன்று (06) வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் எம்.ரீ.எப்.நப்தா தலைமையில் இடம்பெற்றபோது மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

கடந்த வாரம் அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள 150 பெண்களுக்கு மார்பக புற்று நோய் பரிசோதனைகள் இலவசமாக நடாத்தி வைக்கப்பட்டது. இப்பரிசோதனையில் 2 பேருக்கு மார்பக புற்றுநோய் இருப்பதாக இனங்காணப்பட்டு சந்தேககித்துள்ளதால் அவர்களை உடனடியாக மேலதிக சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தல்களும், வைத்திய ஆலோசனைகளும் வழங்கி வைத்துள்ளோம்.

இப்பரிசோதனைகளை எல்லாப் பெண்களும் பரிசோதித்து அதன் மூலம் தங்களின் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்ள முனையவேண்டும். தங்களின் உடலைப் பாதுகாப்பாக வைத்திருந்தால் எமது ஆயுளை நீண்ட நாட்களுக்கு பாதுகாத்துக்கொள்ளலாம். டாக்டர்களிடம் வெட்கப்பட்டு நோய்களை ஒழித்து மறைத்து கூறுவது தங்களின் உயிருக்கு நாமே வித்திடும் உயிர்கொல்லி விதையாகும் என்றுதான் நான் கூறுவேன். நோய்களை டாக்டர்களிடம் சொல்வதற்கு யாரும் வெட்கப்படவேண்டாம்.

DSC04431_Fotor

நோய் உள்ளவர்களை எமது சமூகம் ஒரு வேற்றுக்கண்களால் பார்த்துவிடும் என்ற அச்சம்கொள்ளத் தேவையில்லை. எமது உடல் ஆரோக்கியத்தை நாமே பாதுகாக்கவேண்டும். ஆரம்பத்தில் எமது உடலில் என்னென்ன நோய்கள் உள்ளது என்பதை அறிந்துகொள்ள பரிசோதனைகளை நடாத்தி அதன் மூலம் கண்டுபிடிக்கப்படும் நோய்களுக்கு உரிய சிகிச்சைகளை தகுந்த நேரத்தில் நாம் மேற்கொண்டு வருவோமானால் அதன் மூலம் பூரண சுகமடையலாம் என்றார்.

DSC04433_Fotor