அதாவுல்லா-ரவூப்ஹக்கீம் பிளவு என்பது சதியல்ல , உண்மை போராளிகளால் நிகழ்த்தப்பட்ட புரட்சி !

அதாஉல்லாவின் மீதான “சதி முயற்சி”என்கின்ற வசன நடையுடன் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் ஏறாவூரிலே நடந்த மசூர் சின்னலெப்பை நினைவரங்கிலே உரை நிகழ்த்தி யமை தொடர்பில் அவர் சில விடயங்களை தற்கால அரசியல் நகர்வுகளுக்கேற்றாப்போல் செய்வதற்கு முயற்சி செய்திருக்கிறார்.
அதாவுல்லா-ரவூப்ஹக்கீம் பிளவு என்பது சதியல்ல என்பதையும் ஒட்டுமொத்த முஸ்லீம் சமுகத்திற்க்கும் எதிராக குறிப்பாக வடகிழக்கில் வாழும் முஸ்லீம்களை சர்வதேசத்தின் முன் விலைபேசி விற்றமையை கண்டித்து கட்சியின் உண்மை போராளிகளால் நிகழ்த்தப்பட்ட புரட்சி. 

ATHA  RAUFF HAKEEM
சமுக அடையாளங்களை தாங்கிய கட்சியொன்றினால் சமாதான உடன்படிக்கையொன்றில் முஸ்லீம்கள் இனமல்ல குழு என்று குறிப்பிடப்பட்டமையை அந்த சமுகத்தின் அடையாளமாக இருந்த கட்சியும் தலைமையும் ஏற்றுக் கொண்டமையை சமுக நலனில் அக்கறை கொண்ட மறைந்த தலைவரின் வாரிசுகள் பொறுத்துக்கொள்ளமாட்டர். சமாதான காலப்பகுதியில் கடத்தி கொல்லப்பட்ட ஜனாசா நடு வீதியில் பொலிசாரின் முன்னிலையில் வாழைச்சனையில் வைத்து எரியுட்டப்பட்டதை சமுகத் தலைமை கண்டும் காணது போல் இருந்தால் யாரும் பொறுத்துக்கொள்ளமாட்டர். இதனால்தான் அனேக அதியுயர்பீட உருப்பினர்களை இணைத்துக் கொண்டு அதாஉல்லாஹ் வினால் முஸ்லீம் சமுகத்தின் புரட்சிக்கான பயணம் ஆரம்பமானது.

 

அது கிழக்கின் அனைத்து பிரதேசங்களிலும் வியாபித்தது.இறுதியாக கட்சியை வென்றெடுப்பதற்கான பயணம் உள்ளிருந்த சமுக பிரஞையற்ற முஸ்லீம் சமுகத்திற்கெதிரான சிந்தனைகளை வெவ்வேறு சமுகங்களின் களங்களிலிருந்து கட்சிக்குள் வந்தவர்களால் தமது சுயநல அரசியலுக்காக அன்று தடுக்கப்பட்டது.அன்றிலிருந்து முஸ்லீம் சமுகத்தினுடைய குரல் ஒடுக்கப்பட்டதையும் அரசியல் உரிமைகள் தொடர்பில் கடந்த பதின்மூன்று ஆண்டுகளாக திணறுவதையும் அனுபவித்துகொண்டிருக்கிறோம்.இன்று கட்சியை நாமே காப்பாற்றியதாக கூறுவதற்காக எடுக்கின்ற எத்தனிப்புக்காக அதாஉல்லாஹ் சதி என்று கூற வேண்டிய அவசியமில்லை.காங்கிரஸின்  அதாஉல்லாஹ்வின் பிளவுக்கு முன்போ பின்போ  இவ்வாறான சமுகத்திற்கெதிரான மேற்கொள்ளப்பட்ட அநீதிக்காக யாரும்  பிளவுபட்டவில்லை.அதற்க்கு முன்னரான பேரியல் அஷ்ரப் அவர்களின் இணைத்தலைமை குறித்த விடயங்களில் இவர்கள் நடந்து கொண்ட விதம் தொடர்பில் விபரிக்க வேண்டி வரும். ரவூப் ஹக்கீமினுடைய தலைமையை பாதுகாத்தேன்.சமுகத்தை கைவிட்டோம் எனவும் கூறுவாரானால் அது மித்தப்பொருத்தம்.

 

அஸ்மி அப்துல் கபூர் – முன்னாள் மாநகர சபை உறுப்பினர் 

azmy abdul