சீனாவின் வடமேற்கு பகுதியில் பேருந்து ஒன்று தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவத்தில் குறைந்தது 17 பேர் பலியாகினர். 32 பேர் காயமடைந்துள்ளனர்.
சீனாவின் ஹெலன் கவுண்டி பகுதியில் உள்ள யின்சுவான் நகரில் பர்னிச்சர் பொருட்கள் விற்கும் கடை அருகே நேற்று காலை 7 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. மா யாங்பிங் என்ற நபர் வாளிகளில் தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை பற்றவைத்துவிட்டு வேகமாக சென்றுகொண்டிருந்த பேருந்தின் ஜன்னல் வழியாக தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. தீயில் சிக்கி 17 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் 32 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பண தகராறு தொடர்பாக இந்த சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என்று ஆரம்பகட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய நபரான மா யாங்பிங் சம்பவம் நடந்து 4 மணி நேரத்திற்கு பிறகு போலீசில் சரணடைந்தார்.