தன்னை முட்டாள் என்று கலாய்த்த பாட்டியின் வாயை அடைத்த மார்க் ஸக்கர்பெர்க் !

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க்கின் பேஸ்புக் பக்கத்தில் ஒரு பாட்டி “ நான் என் பேத்தியிடம், உன் கல்லூரியில் முட்டாள் போன்று இருக்கும் ஒருவனோடு டெட்டிங் போ…யார் கண்டா ஒருவேளை அவன் ஒரு மார்க் ஸக்கர்பெர்க்காக இருக்கலாம் என்று கூறிவருகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

mark-zuckerberg-taj-mahal-india
இதற்கு பதில் அளித்துள்ள மார்க் “ முட்டாள் போன்ற ஒருவனை டெட்டிங் செய்வதற்கு பதிலாக உங்கள் பேத்திய ’அவனை’  போல இருக்க சொல்லுங்கள். யார் கண்டா ஒருவேளை உங்கள் பேத்தி ஒரு வெற்றிகரமான கண்டுபிடிப்பாளராக மாறக்கூடும்’ என்று கூறி அந்த பாட்டியை திருப்பி கலாய்த்துள்ளார்.

கல்லூரி காலத்தில் மார்க் ஸக்கர்பெர்க்..அழகாக உடை அணிவதிலோ, மற்றவர்கலோடு இயல்பாக பழகுவதிலோ ஆர்வம் இல்லாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.