தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் 215 பேரை பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய முடியாது.
இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் கிடையாது.
பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறும், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதம் காரணமாக மேற்குலக நாடுகளும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றன.
பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட முன்னர் மேற்குறிப்பிட்ட காரணிகள் குறித்து கவனம் செலுத்தப்படும்.
போரில் என்ன இடம்பெற்றது என ஆராய்ந்து அதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசியல் அமைப்பு மாற்றம் பற்றி இந்த மாதம் 9ம் திகதி நாடாளுமன்றில் அறிவிப்பேன்.
அரசியல் அமைப்பு திருத்தங்கள் குறித்து நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இறையாண்மை மற்றும் உரிமை ஆகியன தொடர்பில் உரிய முறையில் ஆராய்ந்து அதன் பின்னர் திருத்தங்கள் செய்யப்படும் என ஜனாதிபதி இந்திய ஊடகத்திற்கு கருத்து வெளியிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.