2015 ஆம் ஆண்டின் கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் அடிப்படையில் 10 வீத அதிக மாணவர்களை உள்ளீர்க்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் சில்வாவின் தகவல்படி. உயர்தரத்தில் மேலதிகமாக தொழில்நுட்ப பாடநெறியும் உள்ளடக்கப்பட்டுள்ளமையால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேள, 12 பல்கலைக்கழகங்களில் 28 தொழில்நுட்ப அடிப்படை பட்டதாரி திட்டங்களை அறிமுகப்படுத்த ஆணைக்குழு திட்டமிட்டு வருகிறது.
ஏற்கனவே இதற்கு ருகுணு, களனி, ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழங்கள் இணக்கம் வெளியிட்டுள்ளன.
கொழும்பு பல்கலைக்கழகமும் இந்த திட்டத்தை சில காலங்களின் பின்னர் அறிமுகப்படுத்த இணங்கியுள்ளது.
இதேவேளை கடந்த வருடத்தில் 25 மாணவர்கள் புதிதாக பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.