நாட்டை துண்டாடும் அரசியலமைப்பை ஜேவிபி ஏற்றுக் கொள்ளாது : விஜித ஹேரத் !

புதிய அரசியலமைப்பை அறிமுகம் செய்வதனால் பொதுமக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வைக் காண முடியாது என்று ஜேவிபி தெரிவித்துள்ளது.

ஜேவிபியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் இதனை நேற்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது தெரிவித்துள்ளார். 

vijitha-herath_1

இந்தநிலையில் நாட்டை துண்டாடும் அரசியலமைப்பை ஜேவிபி ஏற்றுக் கொள்ளாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

புதிய அரசியலமைப்பு ஒன்று வரையப்படும் முன்னர் அது தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்கள் பெறப்படவேண்டும். 

புதிய அரசியலமைப்பு, தேசிய மற்றும் மதரீதியான ஒற்றுமையையும் நாட்டின் இறைமையையும் பாதுகாப்பதாக அமையவேண்டும் என்று ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஏற்கனவே எதிர்வரும் 9ம் திகதியன்று நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக செயற்படுத்தும் யோசனையை ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே ஜேவிபியின் கருத்து வெளியாகியுள்ளது.