பயங்கரவாதிகள் இலக்கு நிறைவேற்றப்படும் வரையில் எண்ணங்களில் மாற்றமிருக்காது : கோத்தபாய !

இலக்கு நிறைவேற்றப்படும் வரையில் எண்ணங்களில் மாற்றமிருக்காது என பயங்கரவாதிகள் கூறியுள்ளனர் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்..

பெப்பலியான பிரதேச சுனேத்திரா தேவி விஹாரையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

godfapaya rajapakse

பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட 200 பயங்கரவாத சந்தேக நபர்களின் மனநிலை தொடர்பில் ஆய்வு செய்யப்பட்ட போது இவ்வாறு கூறியுள்ளனர்.

பிரபாகரன் கொல்லப்பட்டாலும், புலிகள் அழிக்கப்பட்டாலும் தமக்கு வழங்கப்பட்ட பணிகளை செய்து முடிக்க முயற்சிப்பதாக பயங்கரவாதிகள் கூறினார்கள்.

இவ்வாறு பயங்கரவாதிகள் அளித்த வாக்கு மூலங்கள் புலனாய்வுப் பிரிவிடம் காணப்படுகின்றது.

அரசாங்கத்தினால் விடுதலை செய்யப்பட உள்ள புலி உறுப்பினர்களில் கிரி மற்றும் மொரிஸ் என்ற இரண்டு பயங்கரவாதிகள் இருக்கின்றார்கள்.

கொழும்பு பிரதேச பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இவர்களே பொறுப்பாக செயற்பட்டனர்.

இவர்களை கைது செய்ய பாதுகாப்பு தரப்பு கடுமையான முயற்சிகளை எடுத்திருந்தது.

குறித்த பயங்கரவாதிகளை கைது செய்ய பாதுகாப்பு தரப்பினர் எவ்வளவு சிரமப்பட்டனர் என்பது புதிய அரசாங்க அதிகாரிகளுக்கு தெரியாது.

இந்த தகவல்களை வெளியிடுவது மக்களை அச்சுறுத்துவதற்காக அல்ல.

போர் ஆரம்பிக்கப்பட்டது முதல் சுமார் 30,000 படையினர் உயிர்த் தியாகம் செய்துள்ளதுடன், 50,000 படையினர் உடல் ஊனமுற்றுள்ளனர்.

எனது வாழ்க்கையில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலங்களிலேயே அதிகளவில் போரில் ஈடுபட்டிருந்தேன் என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.