நாடு இரண்டாக பிளவடையக் கூடிய அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் புதிய அரசியல் சாசனமானது ஆபத்தானது என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய இலங்கை மற்றும் பௌத்த மதத்திற்காக முன்னுரிமை குறித்த இரண்டு சரத்துக்களும் புதிய அரசியல் சாசனத்தில் நீக்கப்பட உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த இரண்டு பிரதான சரத்துக்களும் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து மக்களுக்கு அறிவிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழித்தல், தேர்தல் முறைமை மாற்றம் உள்ளிட்ட சில முக்கிய பிரபல்யமான விடயங்கைள அடிப்படையாகக் கொண்டு மக்களை பிழையான வழியில் திசை திருப்பி அரசாங்கம் அரசியல் சாசனத்தில் திருத்தங்களைச் செய்ய முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பரிந்துரைகளுக்கு அமைய அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்யப்படுகின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
பௌத்த மதத்திற்கான முன்னுரிமையை ரத்து செய்வது குறித்து சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் ரத்து செய்யப்பட்டாலும் தேசியப் பாதுகாப்பு குறித்த சில அதிகாரங்கள் ஜனாதிபதியிடம் இருக்க வேண்டியது அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.நாடு இரண்டாக பிளவடையக் கூடிய அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் புதிய அரசியல் சாசனமானது ஆபத்தானது என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய இலங்கை மற்றும் பௌத்த மதத்திற்காக முன்னுரிமை குறித்த இரண்டு சரத்துக்களும் புதிய அரசியல் சாசனத்தில் நீக்கப்பட உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த இரண்டு பிரதான சரத்துக்களும் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து மக்களுக்கு அறிவிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழித்தல், தேர்தல் முறைமை மாற்றம் உள்ளிட்ட சில முக்கிய பிரபல்யமான விடயங்கைள அடிப்படையாகக் கொண்டு மக்களை பிழையான வழியில் திசை திருப்பி அரசாங்கம் அரசியல் சாசனத்தில் திருத்தங்களைச் செய்ய முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பரிந்துரைகளுக்கு அமைய அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்யப்படுகின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
பௌத்த மதத்திற்கான முன்னுரிமையை ரத்து செய்வது குறித்து சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் ரத்து செய்யப்பட்டாலும் தேசியப் பாதுகாப்பு குறித்த சில அதிகாரங்கள் ஜனாதிபதியிடம் இருக்க வேண்டியது அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.