பதவி ஓர் அமானிதம் ?

throne

பதவி என்பது  ஒரு அமானிதம் ஆகும்  அதனை நாம் எவ்வாறு பயன்படுத்துகின்றோமோ  அதனை பொருத்து நாம் ஈருலகிலும் வெற்றி பெற்றுக் கொள்ளலாம்

இந்ந பதவியானது  இன்று எமது அன்றாட வாழ்வில் சர்வ சாதாரணமாக அனைவரிடத்திலும் ஏதோ ஒரு வகையில் பழக்க வளக்கத்தில் இருக்கும் ஒன்றாகும் ஆனால் அளவுக்கதிகமான மக்கள் இந்தப் பதவியின் மகத்துவமமும் தாத்பரியமும் அறியாமல் அதனை தனது சுய லாபத்துக்காகவும் தனது சுய விருப்பத்துக்காவும் கொண்டு சென்று கொண்டு இருக்கிறார்கள் என்பதை நாம் கண் கூடாக பார்த்துக் கொண்டிருக்கின்றோம்

ஒரு குடும்பவியல் வாழ்க்கையில் தனது குடும்பத்தை நிர்வகிக்க கூடிய பொருப்பை ஒரு ஆண் மகனான  தந்தை எடுத்துக் கொள்கிறான்  அது அவனுடைய தலைமைத்துவத்தின் கீழ் இயங்க வேண்டும் அதன் முழுப் பொறுப்பும் அந்த ஆண் மகனுக்கே உரித்தாகும் அதனையே எம் புனித மார்க்கமான இஸ்லாமும் வலியுருத்திக் கூறியிருக்கின்றது பெண்னை நிர்வாகிப்பவன் ஆண்தான் என்றும் ஒரு குடும்பப் பெண்ணின் முழுப் பொருப்பும் தனது கணவனுக்கு கட்டுப் பட்டு நடப்பதும் அவனுடைய சொத்துக் களைப் பாது காத்து தனது பிள்ளைகளை ஒழுக்காற்றலுடன் வளர்ப்பதுமே ஆகும் ஆனால் இதற்கு மாறாக இன்று சில குடும்பவியல் வாழ்க்கையில் பெண்கள் ஆண்களை நிர்வகிப்பவர்களாக இருக்கின்றார்கள் ஆனால் நிச்சயம் பெண்கள் நிர்வகிக்கின்ற வீடுகளில் சந்தோஷமும் மன அமைதியும் இருப்பது கேள்விக்குறியான விடயமே ….?

இஸ்லாமிய ஆதிக்கத்தின் கீழ் ஒரு நாட்டை ஆட்சி செய்கின்ற   தலைமைத்துவத்தை சற்று ஆராய்வோமேயானால் 
ஒரு இஸ்லிமிய  நாட்டின் கலீபாவை பொறுத்த வரையில் அவர் பல்வேறு துறைகளிலான மனித பூரணத்துவத்தைக் கொண்டிருப்பது அவசியமாகும் அதாவது மனித சமூகத்தின் நேர்வழி வழிகாட்டல் பொதுவான பரிபூரணத்துவம் என்பவற்றில் நபி (ஸல்) அவர்கள் ஆரம்பித்து வைத்த நடைமுறைகளை பூரணப்படுத்துவது ஒரு கலீபாவின் கடமையாகும்

இதன்படி  இந்த தலைமைத்துவத்தை  மேற்கொள்ள முடியுமான அந்த தலைவர், அல்லாஹ்வின் புறத்திலிருந்து குறித்துரைக்கப்பட்டவராக இருப்பது அவசியமாகின்றது மேலும், சமூகத்தின் பிரச்சினைகளை இனங்காண்பது அவற்றை அடையாளப்படுத்துவது அவற்றுக்கு வெற்றிகரமான நிவாரணங்களை முன்வைப்பது போன்றவற்றுக்கு சக்தி பெறுவதில் அவர் நபி (ஸல்) அவர்களைப் போன்று ஏழ்மையாகவும்  தோற்றத்தில் அழகாகவும் இல்லா விட்டாலும் அவருடைய நபித்துவ வாழ்க்கையில் அவர் இஸ்லாமிய ஆட்சி செய்த கால கட்டத்தில்   தனது ஆதிக்கத்தின் கீழ் வாழ்ந்த மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்ப்பு வழங்கினாராே அதனை நடைமுறைப்படுத்துவதே ஓர் உண்மையான இஸ்லாமிய ஆட்சியாளனின் பண்பாகும் 

அவற்றுக்கான நிவாரணங்கள் உண்மையான தெய்வீக சட்டங்களிலிருந்து பெறப்பட்டிருக்க வேண்டும் இந்த சட்டங்கள் மட்டுமே மகிழ்ச்சிகரமான மனித வாழ்வை உறுதிப்படுத்த முடியுமானவையாக இருக்கின்றன ஏனெனில் இவையனைத்தும் அல்லாஹ்வின் புறமிருந்து உள்ளவையாகும். அல்லாஹ், மனித ஆன்மாவின் தூண்டுதல்களையும் வேண்டுதல்களையும் அதற்கு ஏதுவான சட்டக்கோவைகளையும் நன்கறிந்துள்ளான்.

இதுதான் ஒரு தலைவரின்  தன்மைக்குரிய உண்மையான காரணியாகும் அது மட்டுமன்றி அவர்கள் கூறுகின்ற,ஆட்சியின் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்துவது அரசின் அமைப்பைப் பாதுகாப்பது போன்ற மேலோட்டமான காரணிகளும் அதில் உள்ளடங்கும் 

இவ்வாறு தலைமைத்துவத்தை  எந்தவொரு  கண்ணோடத்தில் பார்த்தாலும் அதனை நடைமுறைப் படுத்துவதற்கு இஸ்லாமிய கண்ணோட்டத்தை வைத்து ஆராய்ந்தால் அதற்கான தீர்வை இஸ்லாமிய மார்க்கத்தில் மாத்திரமே இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும் என்பதை  இன மத மொழி நிற வர்க்கத்துக்கு அப்பால் அனைத்தின மக்களும்  புரிந்து வைத்திருக்கின்றார்கள் என்பதே நிதார்சனமான உண்மையாகும் 

வை.எம்.பைரூஸ் வாழைச்சேனை