1000 ரூபா சம்பளம் வழங்க முடியாத தோட்ட நிர்வாகங்கள் தோட்டங்களை கொடுத்துவிட்டு செல்லலாம் !

தோட்ட மக்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்க முடியாத தோட்ட நிர்வாகங்கள் தோட்டங்களை கொடுத்துவிட்டு செல்லலாம் என, அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். 

தோட்ட கம்பனிகளுக்கு குறித்த சம்பளத்தை வழங்குவதற்கு வசதிகளும் போதிய பணமும் இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

luxman-kiriella-ndk-01

அதனால் கம்பனிகளுக்கு கூறுகின்றேன் தொழிலாளர்களின் காலத்தையும் நாட்டின் காலத்தையும் வீணாக்காமல் கட்டாயம் 1000 ரூபா சம்பளத்தை தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கவும். தற்போது தோட்டங்களை குத்கைக்கு பெற்று முறையாக நிர்வகித்து தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்க தயாரான நிலையில் பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார். 

அவர்களை கொண்டு தோட்டங்களை நிர்வகித்து தோட்ட மக்களின் வாழ்வாதராத்தை உயர்த்த முடியும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

புஸ்ஸல்லாவ நகரத்தை அன்மிய பிரதேசங்களில் நடைமுறைபடுத்தப்படவிருக்கும் அபிவிருத்திகள் தொடர்பாகவும் புதிய பாதைகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வும் நேற்று (03) நடைபெற்றது. 

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.