நம்மிடம் உள்ள குறைந்த வளங்களைக் கொண்டு உச்ச பயன்களைப் பெற அனைவரும் பழகிக் கொள்ள வேண்டும்: தவம்

 

எம்.ஐ.எம்.றியாஸ்,அபுஅலா

நம்மிடம் உள்ள குறைந்த வளங்களைக் கொண்டு உச்ச பயன்களைப் பெற அனைவரும் பழகிக் கொள்ள வேண்டும்.வழங்கப்படும் பொருட்கள் சிறந்த முறையில் பயன்பாட்டுடையதாக்கி அதன் மூலம் வருமானத்தை ஈட்டுவதற்கான வேலைகளை மேற்கொள்ள வேண்டும்  என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் விவகார தொழில் வாய்ப்புத்துறை செயலாளருமான ஏ.எல்.தவம் தெரிவித்தார்.

 

வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில் எஸ்.எம்.றமீஸ் தலைமையில் கேஸ் சிலிண்டர் மற்றும் அடுப்புக்கள் வழங்கும் நிகழ்வு இன்று  (02) நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு இங்கு தெரிவித்தார்.

01-2_Fotor

அவர் அங்கு மேலும் உரையாறை்றுகையில்,

வருமானம் குறைந்தவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வண்ணம் இன்று இப்பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட வறிய 50 குடும்பங்களுக்கு முதல் கட்டமாக இப் பொருட்கள் வழங்கி வைக்கப்ட்டன.

இப்பொருட்களை நீங்கள் விற்று விடக்கூடாது இதனை பயன்படுத்தி வருமானம் ஈட்டும் தொழில்களை செய்வதற்கான வேலைத்திட்டங்களை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் இதனைக் கொண்டு உச்ச பயன்களைப் நீங்கள் பெறுவதற்காகதான் இப் பொருட்களை நாங்கள் வழங்கி வைத்ததோம்.

இன்று நமது பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு இணைத்துக் கொள்ளும் மாணவர்களின் வீதாசாரம் குறைவாக உள்ளது இதற்கு காராணம் கடந்த காலங்களில் இஸ்லாமிய பெண்களுக்கு பிள்ளைப் பேற்றைக் குறைப்பதற்காக சிலர் சதி திட்டங்களை தீட்டி வேறுவடிவில் ஊசிகளைப் போட வைத்தனர். 

இவ் ஊசிகளின் தாக்கம் காலப் போக்கில் பிள்ளைகளின் பிறப்பு வீதத்தை குறைவடைய வைத்துள்ளது. 

குறிப்பிட்ட ஊசிகளைப் போட வேண்டாம் என நமது இஸ்லாமிய அமைப்புக்கள் அந்த நேரத்தில் பலமுறை அறிவித்தது என மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் மேலும் தெரிவித்தார்.

0_Fotor

இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச செயலக உதவிதிட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.தமீம் பொருளாதார உத்தியோகத்தர் எம்.றியாஸ் உட்பட மாகாண சபை உறுப்பினரின் ஊடக இணைப்பாளர் எம்.ஐ.றியாஸ்  என பலர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

05_Fotor 04-2_Fotor