நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் சிறுநீரக நோய் பரவி வருகின்றது: அமைச்சர் ஹக்கீம்

ஜெம்சாத் இக்பால்

போலன்னறுவ, அநுராதபுரம் உட்பட நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் சிறுநீரக நோய் பரவி வருகின்றது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள பாதிக்கப்பட்டுள்ளரென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

1H6A2529_Fotor

சனிக்கிழமை (02) போலன்னறுவ கிங்குராகொட றோட்டுவாவ ‘ ஆலோஹராம விஹாரை வளாகத்தில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் (ஆர்.ஓ. இயந்திரத்தை) நீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.

1H6A2535_Fotor

அமைச்சர் அங்கு மேலும் கூறுகையில்,

சனிக்கிழமை மாலை போலன்னறுவை தம்பாலை கிராமத்திலும் இவ்வாறான இயந்திதை அமைச்சர் ரவூப் ஹக்கீம் திறந்து வைக்க ஏற்பாடாகியிருந்தது.

இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அநுராதபுர மாவட்டத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் இவ்வாறான நீரை சுத்திகரிக்கும் ஆர்.ஓ இயந்திரங்கள் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில் மேலதிகச் செயலாளர்களான எம்.முயூனூதீன் (அபிவிருத்தி), டீ.எம்.சீ.திசாநாயக்க (நிதி, நிர்வாகம்), தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.ஐ.ஏ.லத்தீப், வடமத்திய மாகாண தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய பொது முகாமையானர் நசுதத் ரத்நாயக்க உட்பட உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

1H6A2571_Fotor