2016ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி நாடு பூராகவும் உள்ள அரச திணைககளங்களில் தேசிய கொடி ஏற்றி தேசியகீதம் பாடப்படுவதுடன் படைவீரர்களுக்கு அங்சலி செலுத்த அரச திணைக்களங்களுக்கு அரசாங்க நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை ஜனவரி முதலாம் திகதி வட மாகாணம் உட்பட நாடு பூராகவும் உள்ள அரச திணைக்களங்களில் காலை 9 மணிக்கு தேசியக்கொடி எற்றப்பட்டு தேசிய கீதம் பாடப்படுவதுடன், படைவீரர்கள் உட்பட நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த சகலரையும் நிணைவு கூர்ந்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தும் படியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,
அதனைத் தொடர்ந்து அரச உத்தியோகஸ்தர்களின் உறுதிமொழியினை உரத்து வாசிக்குமாறும், சகல அரச திணைக்களங்களுக்கும் அரசாங்க நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சினால் சுற்றிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி அணைத்து அரச உத்தியோகஸ்தர்களும் ஜனவரி 1ம் திகதி குறித்த நிகழ்வில் கலந்து கொள்ள பணிக்கப்பட்டுள்ளனர்.