ஏமனில் விபத்துக்குள்ளான சவுதி போர் விமானம்: சாதுர்யமாக உயிர் தப்பிய பைலட்!

images

ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் ஹவுத்தி போராளிகளுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் சண்டையிட்டு வருகின்றன. 

இந்நிலையில், இன்று ஏமனில் உள்ள ஜிசான் மாகாணத்தில் சண்டையிட்டு வந்த சவுதியைச் சேர்ந்த F-16 போர் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானதாகவும், விமானத்தை ஓட்டிய பக்ரைன் நாட்டைச் சேர்ந்த விமானி இந்த விபத்தில் சாதுர்யமாக உயிர் தப்பியிருப்பதாகவும் சவுதி அரசு தெரிவித்துள்ளது.

விபத்து குறித்த விரிவான தகவல்கள் எதையும் சவுதி வெளியிடவில்லை.