வரி ஏய்ப்பு செய்த 318 மில்லியன் யூரோக்களை இத்தாலி அரசுக்கு செலுத்த ஆப்பிள் நிறுவனம் சம்மதம்!

images

கம்ப்யூட்டர், கம்ப்யூட்டர்களுக்கு தேவையான மென்பொருள் உள்ளிட்ட உபகரணங்களுடன் சமீபகாலமாக ஐபோன் உற்பத்தியிலும் கொடிகட்டிப் பறக்கும் ஆப்பிள் நிறுவனத்துக்கு உலகம் முழுவதும் பெரிய சந்தை உள்ளது. பல நாடுகளில் உற்பத்தி மற்றும் விற்பனை அலகுகளை இந்நிறுவனம் நடத்தி வருகின்றது.

இந்நிலையில், இத்தாலி நாட்டில் உள்ள ஆப்பிள் நிறுவனம் சுமார் 318 மில்லியன் யூரோக்கள் அளவில் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக இத்தாலி அரசு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக, விசாரிக்கப்பட்டுவரும் நிலையில் மேற்கண்ட 318 மில்லியன் யூரோக்களை இத்தாலி அரசுக்கு செலுத்த ஆப்பிள் நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளதாக இத்தாலி வரித்துறை அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது.