செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்காக அமெரிக்கா 55 மில்லியன் டாலர் ஒதுக்கீடு!

7537b300-1e3f-4716-bd7e-a17780a6aacd_S_secvpf

செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் திட்டத்துக்காக 55 மில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்து அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த தொகையை வைத்து செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வசிக்கக்கூடிய வசதிகளுடன் கூடிய கூண்டறையின் மாதிரியை வரும் 2018-ம் ஆண்டுக்குள் உருவாக்கிவிட வேண்டும் என்பதில் நாசா விஞ்ஞானிகள் தற்போது அதிக ஈடுபாடு காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 2016-ம் ஆண்டுக்குள் மனிதர்கள் வசிக்கக்கூடிய வசதிகளுடன் கூடிய கூண்டறையின் மாதிரியை (crew module) விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் நிலைநிறுத்தும் முயற்சியில் நாசா விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.