உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் நீடிப்பு !

Unknown
பதவிக்காலம் முடிவடையும் 23 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலத்தை எதிர்வரும் ஜூன் மாதம் 30ம் திகதி வரை நீடிக்கும் வர்த்தமானி அறிவித்தலை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.

இதனடிப்படையில், கொழும்பு மாநகர சபை, தெஹிவளை – கல்கிஸ்சை மாநகர சபை, ஸ்ரீ ஜயவர்தனபுர – கோட்டே மாநகர சபை, கம்பஹா மாநகர சபை, நீர்கொழும்பு மாநகர சபை, குருணாகல் மாநகர சபை, கண்டி மாநகர சபை, நுவரெலியா மாநகர சபை, மாத்தளை மாநகர சபை, மாத்தறை மாநகர சபை, பதுளை மாநகர சபை, காலி மாநகர சபை, அம்பாந்தோட்டை மாநகர சபை, இரத்தினபுரி மாநகர சபை, அனுராதபுரம் மாநகர சபை, கல்முனை மாநகர சபை ஆகிய மாநகர சபைகளின் பதவிக்காலம் ஜூன் மாதம் 30ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 

மேலும் கொல்லன்னாவ நகர சபை, கொட்டிகாவத்தை – முல்லேரியாவ பிரதேச சபை, குண்டசாலை பிரதேச சபை, கடவஸ்தர மற்றும் கங்கவட்டகோரள பிரதேச சபை, அம்பாந்தோட்டை பிரதேச சபை, சூரியவெவ பிரதேச சபை ஆகியவற்றின் பதவிக்காலமும் நீடிக்கப்பட்டுள்ளது. 

இந்த உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் நாளை 31 திகதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.