ஹிருனிகாவை கைது செய்ய முடியாது : காவல்துறை !

பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவை கைது செய்ய போதியளவு சாட்சியங்கள் கிடையாது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

hirunica-1

அண்மையில் தெமட்டகொட பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்றமை தொடர்பில் ஹிருனிகா பிரேமசந்திர மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் ஹிருனிகாவிடம் இரண்டு தடவைகள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்த கடத்தலுடன் ஹிருனிகா நேரடியாக தொடர்பு பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடையாது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஹிருனிகாவின் தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவருக்கு தெரியாமல் டிபென்டர் ரக வாகனத்தை எடுத்துச் சென்று நபர் ஒருவரை கடத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, கடத்தப்பட்ட தாம் ஹிருனிகாவின் காரியாலயத்தில் வைத்து ஹிருனிகாவினால் எச்சரிக்கப்பட்டதாக கடத்தப்பட்ட இளைஞர் தெரிவித்திருந்தார்.

இரண்டு குடும்பங்களை அழைத்து ஹிருனிகா ஆலோசனை வழங்கியுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.