புதிய அரயலமைப்பு உருவாக்கப்பட்டு அதற்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைத்ததும் அரசாங்கம் அது தொடர்பான சர்வஜனவாக்கெடுப்பை நடத்தும் என பிரதியமைச்சர் அஜித்பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று செய்தியாளர் மாநாடொன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் 1972 ம்ஆண்டில் இடம்பெற்றது போல அரசமைப்பு சதிமுயற்சிகள் எதிலும் ஈடுபடாது,அப்போது புதிய அரசமைப்பினை அறிமுகப்படுத்துவதற்காக பாராளுமன்றத்தின் அனுமதி மாத்திரம் பெறப்பட்டது.
ஜனவரி 9ம் திகதி புதிய அரசமைப்பை உருவாக்குவதற்காக பாராளுமன்றத்தை அரசமைப்பு பேரவையாக மாற்றுவதற்கான யோசனையை அரசாங்கம் முன்வைக்கும்.
புதிய அரசமைப்பு உருவாக்கப்பட்டதும்,அது அமைச்சரவையினதும், பாராளுமன்றத்தினதும் அங்கீகாரத்தை பெறவேண்டும்,மூன்றில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அதற்கு அவசியம் என பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.