அபு அலா
நோர்வே நாட்டில் கல்வி பயிலும் பாடசாலை மாணவர்கள் அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப தங்களின் சீருடைகளை அணிந்துகொண்டு பாடசாலைக்கு செல்கின்றனர். அதுமாத்திரமல்லா
மாவடிப்பள்ளி அல் – அஷ்ரப் மகா வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம்.சைபுதீன் தலைமையில் றோயல் பராமரிப்பு நிலைய முன்பள்ளி மாணவர்களின் வருடாந்த விடுகை விழா இன்று (28) பாடசாலை கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றபோது மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
எமது நாட்டில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு சீருடை கட்டுப்பாடு, கல்வி பயில்வதில் கட்டுப்பாட்டு, ஒவ்வொரு மாணவர்களுக்குமென தனியான மேசை கதிரை ஒதுக்கப்பட்டு அவர்கள் தங்களின் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும்போது தங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்துகொண்டு செயற்படவேண்டுமென பல கட்டுப்பாட்டின் மத்தியில்தான் எமது நாட்டின் கல்வி நடவடிக்கைகள் அமைந்துள்ளது. இந்த நிலைமை நாம் மாற்றியமைக்கவேண்டும்.
மாணவர்கள் சுதந்திரமாகவும், தன்னிச்சையாகவும் செயற்பட அவர்களுக்கு இடமளிக்கவேண்டும். அவர்களின் விருப்பு, வெறுப்புக்களை பெற்றோர்களாகிய நாம் அறிந்து செயற்பட்ட முயற்சித்து நடப்பதன் மூலமே எமது பிள்ளைகளின் கல்வி கற்றல் நடவடிக்கைகளை உயரத்தமுடியும்.
இன்றைய மாணவர்களுக்கு தகவல் தொழிநுட்ப கல்வியையும், ஆங்கிலக் கல்வியையும் கட்டாயம் கற்றுக்கொடுக்கவேண்டும் என்ற விடயத்தை அன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் பல சந்தர்ப்பத்தில் எடுத்துரைத்துள்ளார். அன்று அவர் சொன்ன விடயத்தை இன்று எல்லோரும் உணர்கின்றனர் என்றார்.