இன்றைய அரசில் ஊடகவியலாளர்களுக்கு முழுமையான சுதந்திரமும், பாதுகாப்பும் உள்ளது !

அபு அலா 

நாட்டில் இடம்பெறுகின்ற நல்லவைகளையும், கேட்டவைகளையும் உடனுக்குடன் எமது நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் வாழும் உறவுகள் அறிந்துகொள்ளும் வகையில் செய்திகளை அனுப்பி வெளிச்சப்படுத்தி செயற்படும் ஊடகவியலாளர்கள் ஆரோக்கியமுள்ளவர்களாக வாழவேண்டும் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸிர் தெரிவித்தார்.

இலங்கை மெடி ரெப்ஸ் ஸ்ரீலங்கா நிறுவனத்தால் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான நீரிழிவு நோய் பரிசோதனை செய்யும் ஒரு தொகுதி கருவிகள் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு இலவசமாக வழங்கி வைக்கும் நிகழ்வு அட்டாளைச்சேனை ஒஸ்ரா மெடிக்கல் கூட்டமண்டபத்தில் இடம்பெற்றபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

nazeer_Fotor

அவர் மேலும் கூறுகையில்,

சமுகத்தில் நல்லவற்றை செய்யும் ஊடகவியலாளர்கள் நோயற்றவர்களாக வாழவேண்டும். அவர்கள் ஆரோக்கியமுள்ளவர்களாக இருந்தால்தான் எமது நாட்டில் இடம்பெறகின்ற அனைத்துவிதமான செயற்பாடுகளை அவர்கள் எழுதும் எழுத்தின் மூலம் பொதுமக்களுக்கும், அரசியல்வாதிகளான எங்களுக்கும் அதுவொரு ஊன்றுகோளாக அமையும். இதனால் அரசியல்வாதிகள் மாத்திரமல்ல பொதுமக்களும் நல்ல பயன்களை பெறுவார்கள்.

இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தில் ஊடகவியலாளர்களுக்கு பல நல்ல திட்டங்கள் முன்வைக்கப்பட்டு, அவர்கள் சுதந்திரமாகவும், அச்சமில்லாமலும் அவர்களின் ஊடகப் பணியினை முன்னெடுத்துச் செல்வதற்கான சகல வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது என்றார்.

இலங்கை மெடி ரெப்ஸ் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜாபிர் சாலியிடம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் விடுத்த வேண்டுகோடுக்கமைவாக அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனைபாலமுனை, ஒலுவில்நிந்தவூர்சாய்ந்தமருதுஅக்கரைப்பற்று பிரதேச ஊடகவியலாளர்கள் 25 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான நீரிழிவு நோய் பரிசோதனைக் கருவிகள் வழங்கி வைக்கப்பட்டது.