அசாஹீம்
கல்குடா தௌஹீத் ஜமாதின் ஏற்பாட்டில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 120 வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (28.12.2015) மாலை நாவலடி மர்க்கஸ் அந் நூர் கலாபிடத்தில் இடம் பெற்றது.
நாவலடி மர்க்கஸ் அந் நூர் கலாபீடத்தின் முதல்வர் மௌலவி ஏ. ஹபீப் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் சிறப்பு சொறn;பாழிவாளராக தாருஸ்ஸலாம் கலாபீடத்தின் முதல்வர் மௌலவி எம்.பி.இஸ்மாயில் மதனி கலந்து கொண்டதுடன் அதிதிகலாக கல்குடா தௌஹீத் ஜமாதின் தலைவர் மௌலவி ஏ.எல்.பீர்முஹம்மது, செயலாளர் மௌலவி எஸ்.எச்.எம்.அறபாத், பாலைநகர் தியாவட்டுவான் பிரதேச பள்ளிவாயல்களின் நிறுவாகிகளும் கலந்து கொண்டனர்.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் உள்ள பாலைநகர் மற்றும் தியாவட்டுவான் பிரதேசங்களைச் சேர்ந்த 120 வறிய மாணவர்களுக்கு இரண்டாயிரம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.