(வீடியோ).,மட்டக்களப்பு நாவலடி திருக்கொண்டியாமடு காணிகளின் வேலிகள் பொலிசாரின் உதவியுடன் அகற்றப்பட்டன!

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்

 

வீடியோ காணிகளின் வேலிகள் அகற்றப்பட்ட சம்பவம்:- youtube.com/watch?v=9-N9qLjd44I&feature=youtu.be

1985ம் ஆண்டிலிருந்து படிப்படியாக யுத்த சூழ் நிலைமகள் காரணமாக மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதிகளை ஒட்டி காணப்படுக்கின்ற கிராமங்களான முறுத்தானை, பொண்டுகள்சேன,கல்லிச்சை, பொத்தானை, அகுறானை, வெறுகள், வாகரை, ஊத்துச்சேனை,வடமுனை, குளத்துமடு, வகனேரி போன்ர மாவட்டத்தில் எல்லைக் கிராமங்களிலிருந்து விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்கள் காரணமாக இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் கல்குடா ஓட்டமாவடி மீராவோடை, வாழைச்சேனை கிராமங்களில் மூன்று தாசப்தங்களாக அதிகரித்து வருக்கின்ற சனநெரிசல்மிக்க சூழ்நிலைகளுக்கு மத்தியில் பல சுகாதார பிரச்சனைகளுக்கு நாளுக்குநாள் முகம்கொடுத்தவர்களாக வாழ்வதற்கான இடப்பிரச்சையினை பாரிய பிரச்சனையாக எதிர்நோக்கி வருக்கின்றனர்.

கவர் போட்டோ_Fotor

இதற்கு நிரந்த தீர்வினை பெற்றுக்கொளும் ஆசையுடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்ளப்பு-கொழும்பு பிரதான வீதியில் திருக்கொண்டியாமடு (நாவலடிச்சந்தி) பிரதேசத்திலிருந்து வீதியின் இரு மருங்கிலும் சுமார் நான்கு கிலோ மீற்றர் தூரம் வரை காணிகளற்றவர்கள் சட்டவிரோதமான முறையில் அரச காணிகளில் தங்களுக்குரிய இருப்பிடங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக போடப்பட்ட எல்லை வேலிகள் பொலிஸாரினால் நேற்று (27.12.2015) மாலை அகற்றப்பட்டன.

04_Fotor

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி, வாகரை மற்றும் கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்குச் சொந்தமான அரச காணிகளை அப்பகுதிகளில் காணிகளற்ற தமிழ்-முஸ்லீம் பொது மக்கள் பிடித்து எல்லைகள் போட்டு வந்த நிலையில், பிரதேச செயலாளர்களினால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயசிங்க தலைமையில் வருகை தந்த பொலிஸ் குழுவினரால் சட்டவிரோதமாக அரச காணிகளில் போடப்பட்ட எல்லை வேலிகள் அகற்றப்பட்டன. 

அப்பகுதிகளில் காணிகளைப் பிடித்த தமிழ்-முஸ்லீம் மக்கள் கருத்துத்தெரிவிக்கையில், எங்களுக்கு குடியிருப்பதற்கு காணிகள் இல்லாததால் தான் தாங்கள் அரச காணிகளில் குடியிருப்பதற்காக வந்துள்ளோம். ஆனால், அரச அதிகாரிகள் நாங்கள் குடியேறுவதற்குத் தடையாகவுள்ளார்கள் என்றும் தெரிவித்தனர். இந்த இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் பொது மக்களுடன் கலந்தாலோசித்ததோடு, இவ்விடயம் தொடர்பாக மாவட்ட செயலாளருடனும் மற்றும் அதிகாரிகளுடனும் பேசி சுமூகமான தீர்வொன்றைப் பெற்றுத்தருவதாக மக்களிடம் உறுதியளித்தார். 

27.12.2015 நேற்று பிரதேச செயலாளர் வேண்டுகோளுக்கிணங்க குறித்த பிரதேசத்தில் வாழ்வதற்கு இடமின்றி குடியேற பிடிக்கப்பட்டிருந்த காணிகளுக்கான வேலிகள் பொலிசாரினால் அகற்றப்பட்ட வேலையில் இடம்பெற்ற சம்பவத்தின் காணொளியினை எமது இணைய நாளிதல் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.