மட்டு-மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவராகவும் ,மாவட்டத்தின் 14 பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவராகவும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமனம்!

 

 
பழுலுல்லாஹ் பர்ஹான்
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவராகவும் ,மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களின் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவராகவும் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த 23 திகதி தொடக்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
mlam-hizbullah
மேற்படி நியமனம் தொடர்பாக நியமனத்தின் பிரதி ஜனாதிபதியினால் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான அமீர் அலிக்கும், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான சிறினேசனுக்கும், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவரும் மாகாண முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட்டிக்கும் ,தேசிய கொள்கைகள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கும்,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கும் உத்தியோகபூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவராகவும் ,மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களின் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவராகவும் தற்போது நியமிக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கடந்த அரசாங்கத்தில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.