மஹிந்த தரப்பிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க சுதந்திரக் கட்சி தீர்மானம் !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஸவிற்கு ஆதரவான தரப்பிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டு பிரதானமாக செயற்பட்டு வரும் உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்க கட்சி தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்த தரப்பில் இணைந்து கொண்டு செயற்பட்டு வருவோரின் தொகுதி அமைப்பாளர் பதவிகளை பறிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு சில உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சிலர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் முக்கிய பதவிகளை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.