முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இணைந்துசெயற்பட முடியாது : சந்திரிக்கா !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இணைந்துசெயற்பட முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

mahinda-chandrika_Fotor
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மஹிந்தவுடன் இணைந்து செயற்படுமாறு கட்சியின் சில சிரேஸ்ட தலைவர்கள் விடுத்த கோரிக்கையை சந்திரிக்கா திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.மஹிந்த ராஜபக்ஸ கட்சியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்க வேண்டுமென கோரியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய ரீதியில் அடைந்த இரண்டு தோல்விகளுக்கும் மஹி;ந்த தரப்பே காரணம் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்காக யாருடனும் இணைந்து செயற்படத் தயார் என மஹிந்த ராஜபக்ஸ தரப்பினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கட்சிக்குள் பிளவு ஏற்பட்டால் அது ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்கு வழியமைக்கும் என கட்சியின் சிரேஸ்ட உறுப்பிர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.