சப்றின்
நேற்று (25.12.2015) வெள்ளிக் கிழமை அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் சம்மேளனத்தின் 20வது வருட நிறைவை ஒட்டிய விழா,கௌரவிப்பும் மிகவும் சிறப்பான முறையில் சம்மேளனத்தின் தலைவர் மீரா இஸ்ஸதீன் மற்றும் சம்மேளன உறுபினர்களால் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இதில் பிரதம அதிதியாக மு. கா தலைவர் அமைசர் ஹக்கீம் மற்றும் மாகாண முதலமைச்சர் ஹபீஸ் நசீர் அஹமட், பிரதி அமைர்சர்கள், மாகாண அமைச்சர் என பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தலைமை உரை நிகழ்த்திய மீரா இஸ்ஸதீன் இந்நிகழ்வுக்கு அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களையும் நாங்கள் அழைத்துள்ளோம்,
இருந்தாலும் கட்சிகள் தாண்டி மனித நேயம் இம் மகாநாட்டில் வெளிப்பட்டிருப்பதனை நான் இங்கே சுட்டிக் காட்ட வேண்டும் என நினைக்கிறேன்,அதாவது எங்களது பிரதம அதிதியான மு கா தலைவர் அவர்களுக்கு ஒர்கீட் மாலை அணிவிக்க வேண்டும் என்று எண்ணியபோது நமது பிரதேசத்தில் அதனைப் பெற்றுக் கொள்ள முடியாது இருந்தது அதே நேரம் தொடர் விடுமுறை காலம் என்பதால் கொழும்பில் இருந்து பெரும்பாலானவர்கள் ஊர் திரும்பி இருந்தனர் இவ்வேளையில் எனக்கு எஸ் எம் சபீஸ் ஞாபகத்துக்கு வந்தார் அவ்வேளை நேரம் மாலை 6 மணியைத் தொட்டிருந்தது உடனடியாக சபீஸ் அவர்களை தொடர்பு கொண்டபோது அவரும் ஊர் வருவதற்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்தார் நான் விடயத்தைச் சொன்னேன் அதற்கு சபீஸ் சொன்னார் கவலை வேண்டாம் என்னோடு விட்டு விடுங்கள் நான் இன்று நின்று நாளை எடுத்து வருகிறேன் என்றார் ,
இன்றுள்ள சூழ்நிலையில் அனைத்துக் கட்சிகளும் சபீசை இணைத்துக் கொள்ள முயற்சி செய்கின்ற போதிலும் தனது தலைவன் அதாஉல்லாதான் என்று ஆணித்தரமாக கூறும் இவருக்கு மு கா தலைவருக்குத்தான் மாலை வாங்கப் படுகிறது என்பது தெரியும் இது பற்றி நான் அவரிடம் கேட்டபோது ஒரு மனிதனை சிறப்பான முறையில் கௌரவம் செய்ய வேண்டும் என நீங்கள் எண்ணுகிறீர்கள் இந்த எண்ணம்தான் புனிதமானது அதுதான் முதன்மை கட்சி பாகுபாடுகள் எல்லாம் இரண்டாம் பட்சமே என்றார்.
அதனால்தான் சொல்கிறேன் இவ்விழா சிறந்த மனித நேயங்களை கொண்டவர்களையும் வெளிப்படுத்தியுள்ளது என்பதில் நான் சந்தோசமடைகிறேன் எனவும் உரையைத் தொடர்ந்தார்.