ஜனவரி மாதம் ஸ்ரீல.சு.கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் முக்கிய மாற்றங்கள் !

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் மாற்றம் செய்ய கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
slfp1

அதன்படி எதிர்வரும் ஜனவரி மாதம்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் 2016ஆம் ஆண்டுக்கான சுதந்திரக் கட்சியின் முதலாவது மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தொகுதியாளர் பதவி மாற்றம் குறித்த அனுமதி பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.

இதன் போது புதிய அமைப்பாளரை நியமித்தல்,  சில தொகுதி அமைப்பாளரை பணி நீக்குதல், சில தொகுதி அமைப்பாளர்களை தொடர்ந்தும் பதவியில் நீடிக்கச் செய்தல் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

2016ஆம் இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை இலக்கு வைத்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கட்சியின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் எடுக்கப்படும் முதல் கட்ட நடவடிக்கையாக தொகுதி அமைப்பாளர் நியமனங்கள் கருதப்படுகின்றது.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இணை நிறுவனங்களுக்கான நியமனங்களும் இதன் போது மேற்கொள்ளப்பட உள்ளதாக கட்சித் தகவல்கள் மேலம் தெரிவிக்கின்றன.