புலிப் பயங்கரவாதிகலாள் 26.12.21992ம் ஆண்டு மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் மீயான்குளச்சந்தியில் வைக்கப்பட்ட நிலக்கண்ணி வெடியில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு சொந்தமான மாருதி ஜீப் வண்டி அகப்பட்டது அதில் பயணித்த எனது தந்தையுடன் ஐவரும் அப்பகுதியில் விறகு வெட்டச் சென்ற ஒருவருமாக ஆறு பேர் மரணிக்கப்பட்டார்கள் அவர்கள் நினைவாக 26.12.1993ம் திகதி வெளியிடப்பட்ட தியாக தீபங்கள் என்ற ஞாபகாத்த மலரில் என்னாள் எழுதப்பட்ட கவிதையை இன்று வாப்பா மரணித்து 23 வருடங்கள் நினைவாக மீள் பிரசுரம் செய்கிறேன்.
அன்பு தந்தைக்கு
அன்பும் அறிவும்
அமுதாய் ஊட்டி
அரவனைத்த
அன்புத் தந்தையே…!
நான் கிள்ளை மொழி பேசி
கிளித்தட்டு ஆடிய போது…
நல்ல மொழி பேசி
என்னை-
நடக்கப் பழக்கிய இனிய தந்தையே…!
பள்ளிக்கூடம் சென்று
அறநெறிகளை
படித்துவா என்று
புத்தி சொன்ன தந்தையே…!
என் பிஞ்சு விரல்களை
அன்பாய் பிடித்து
என்னை
குழந்தையாகவே கண்ட
புனித தந்தையே…!
நான் இளைஞனான போது
என்னை விட்டு-
குடும்பத்தை விட்டு –
இவ்வுலகையே விட்டு…
நீங்கள்-
மறைந்து செல்ல
நான் செய்த
பாவம் என்ன
இன்னும் அறியேன் …!
குறிப்பு – புலிப் பயங்கர வாதிகளின் திட்டமிட்ட நிலக்கண்ணி வெடியில் எனது தந்தையுடன் (பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தின் முதலாவது அதிபர்) மரணித்தவர்கள் தந்தையின் நண்பரான மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய நாடறிந்த எழுத்தாளர் வை.அஹமது, ஓட்டமாவடி உதவி அரசாங்க அதிபராக கடமையாற்றிய ஏ.கே.உதுமான், சட்டத்தரணியும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் உபதலைவராகவும் இருந்த ஏ.பி.எம்.முஹைதீன், விறகு வியாபாரி சாஹூல் ஹமீட் வாகன சாரதி மகேந்திரன் ஆகிய அருவருமே மரணமடைந்தவர்கலாவர்.