அபு அலா
கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் நிலவிவரும் தாதியர்கள் வெற்றிடம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை ஆராயும் அவசர கலந்துரையாடல் நேற்றிரவு கிழக்கு மாகாண முதலமைச்சரின் திருகோணமலை இல்லத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுணர் ஓஸ்டின் பெணான்டோ, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எ.எல்.முஹம்மட் நஸீர், கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் டாக்டர் கே.முருகாணந்தம், பிரதி பணிப்பாளர் பிர்னாஸ் இஸ்மாயில், சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 92 தாதியர்கள் வெற்றிடம் உள்ள நிலைமையில், கடந்த வாரம் 40 தாதியர்களுக்கு நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதுதொடர்பில் தாதியர்கள் சங்கம் பாரிய எதிர்ப்பினையும் தெரிவித்து வருகின்றது.
தாதியர்கள் அறவே இல்லாத வைத்தியசாலைகளுக்கு தாதியர்களை நியமிக்கும் படியும், மீதி தாதியர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டி அச்சங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவும் குறித்த பிரச்சினையை உடனடியாக தீர்த்துவைக்கும் நோக்கிலேயே இந்த விஷேடமான அவசர கலந்துரையாடல் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.