புல்மோட்டை அரிசிமலை பிக்குவினால் இனவாதத்தை தூண்டுகின்ற கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பு !

 

anwar

  புல்மோட்டை பொன்மலைகுடா அரிசிமலை பிரதேசத்தில் NEHRP நிறுவனத்தால் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த 2004 ஆண்டில் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள் கடந்த 2013 முதல் கடற்படையினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மூன்று வீடுகளில் ஒன்று விடுவிக்கப்பட்ட நிலையில் புல்மோட்டை பிரதேசத்தில் உள்ள அரிசிமலை கந்த புராண பெளத்த விகாராதிபதி பனாமுற திலக வம்ஸ கடற்படையின் கட்டுபாட்டில் உள்ளபோதே,

குறித்த வீட்டு உரிமையாளர் காலித் என்பவரின் வீட்டில் கண்டி பிரதேசத்திலிருந்து சிங்கள நபர் ஒருவரை கொண்டுவந்து,அமர்த்துவதற்காக குறித்த வீட்டில் உரிமையாளரின் அனுமதியின்றி சட்டவிரோத கட்டடங்கள் கட்டப்பட்டநிலையில் உரிமையாளர் தனது குடும்பத்துடன் கடந்த 02.12.2015 ம்திகதி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வரின் முயற்சியினால் குறித்த வீட்டுக்குள் மீள குடியமர்ந்தார்

 

குறிப்பிட்ட விடயமாக மாவட்ட செயலாளர் புஸ்பகுமார கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்னாண்டோ உட்பட பலரின் கவனத்திற்கு கொண்டு கிழக்குமாகாணசபை உறுப்பினர் ஆர்.எம்/.அன்வரினால் கொண்டு சென்று அதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று கொண்டிருக்கும் தருவாயில்,

12342510_1652992641606236_1129907658218285453_n_Fotor

குறித்த பெளத்த குருவால் 02.12.2015 திகதி இடப்பட்ட ஜனாதிபதிக்கு விலாசமிடபட்டு கிழக்கு மாகாண கிழக்கு மாகாண ஆளுனர், திருமலை மாவட்ட செயலாளர்,கடற்படை தளபதி பாதுகாப்பு அமைச்சு,குச்சவெளி பிரதேச செயலாளர் போன்றோருக்கு பிரதிகள் இடப்பட்டும் இனவாதத்தை தூண்டுகின்ற கடிதம் ஒன்று அனுப்பிவைக்கபடுள்ளது

குறித்த சிங்கள மொழி கடிதத்தின் தமிழ் ஆக்கம் கீழே,

 

அதிமேதகு ஜனாதிபதி

கொழும்பு

2015/12/02. 

 

இனவாத நோக்குடன் ஆக்கிரமிக்கபட்டுள்ள விகாரைக்கு சொந்தமான இடத்தினை மீட்டுதரக் கோரல்

திருகோணமலை மாவட்ட குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவின் புல்மோட்டை கிராமத்தில் பௌத்தர்களின் புனித தளமான ஆசிரிகந்த புராதன விகாரைஅமைந்துள்ளது,

எமதுவிகாரையானது வரலாற்றில் 1970/80 காலப்பகுதியில் கௌரவ சிறில்மேதேவு அமைச்சர் அவர்கள் மூலம் எகல எனும் தலைமை பிக்கு மூலம் அடையாளம் காணப்படது அவ்வாறு அடையாளம் காணபட்ட பிரதேசங்களில் இருந்து யுத்தத்தினால இடம்பெயர்ந்து சென்ற காலப்பகுதியில் புனிதபூமியில் அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலம் அனாவசியமாக கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளது, அவை எவருக்குமோ அல்லது நிறுவனத்துக்கோ,வழங்கப்பட வில்லை குறித்த இடங்களுக்கு அனுமதி பத்திரங்களோ அல்லது ஒப்பாமோ யாருக்கும் வழங்கப்படவில்லை

மேலும் குறித்த விடயம் தொடர்பாக அப்பகுதியில் நிர்மாணிக்கபட்ட கட்டடங்களை இனவாத அரசியலில் ஈடுபடும் ஒருவரால் வேண்டுமென்றே வேறு பிரதேசங்களில் காணி மற்றும் விவசாய நிலங்கள் உள்ளவர்களுக்கு பெற்று கொடுக்க நடவடிக்கை எடுத்துவருகின்றனர்

இங்கு அமைக்கபட்டுள்ள கட்டடங்களில் ஒன்றை எமது விகாரையின் தர்ம மண்டபமாக பாவித்து வருவதுடன் ஏனைய இரண்டு கட்டடங்களை கடற்படையினர் பராமரித்து வருகின்றனர்

அத்துடன் விகாரை நிலையத்துக்கு தானங்கள் வழங்குவதற்கு வேறு எந்த சிங்கள பௌத்தர்கள் இல்லாத நிலையில் அருகில் அமைந்துள்ள கடபடையினர் மூலம் தானங்கள் வழங்கப்படுகின்றது

குறித்தபிரதேசத்தில் இருக்கின்ற ஒரேயொரு தலைமைபிக்குவும் ஏனையபிக்குவும் வெவ்வேறு சந்தர்பங்களில் இந்தஇனவாத பிரிவினரால் பலவிதமான நடவடிக்கைகள் மூலம் விகாரைக்கு அருகில் இருக்கின்ற எமக்கு உதவிஅளிக்கின்ற கடற்படையினரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கின்றனர்

அவ்வாறு வெளியேற்றப் பட்டால் இங்கு இருக்கின்ற பெளத்த பிக்குகள் வேறு பிரதேசங்களுக்கு செல்ல வேண்டிய நிலைஏற்படும்

எனவே விகாரைக்கு அருகில் தர்மசாலாவாக பயன்படுத்தப்படும் இடத்தினையும் விகாரைக்கு பாதுகாப்பாக இருக்கும் இரு கடற்படையினர் தங்கும் கட்டங்களையும் எமக்கு பெற்றுத் தரும்படி பொறுப்புவாய்ந்த தங்களிடம் வேண்டிக்கொள்கிறேன்

பிரதி: பாதுகாப்புஅமைச்சு

வைஸ் அட்மிரல் கடற்படை

கௌரவ ஆளுனர்

அரசாங்க அதிபர்

 

   இவ்வாறு பலகடிதங்கள் இனவாதத்தை தூண்டும்விதத்தில் அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதி போன்றோருக்கு தொடர்ந்தும் எமது பிரதேச மக்கள் மற்றும், குறித்த அரசியல்வாதி ஒருவர் என்று மாகாண சபை உறுப்பினர் அன்வரையே குறிப்பிட்டு சிங்கள மக்களுக்கு எதிராக செயல்படுகிறார்,

என்ற பொய் குற்றச்சாட்டையும் இனவாதத்தையும் தூண்டிவருவதுடன்,புல்மோட்டை பிரதேசத்தின் அரிசிமலை மாத்திரமன்றி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புல்மோட்டை பிரதேச முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான வயல் காணிக்குள் சட்டவிரோத கட்டடங்கள் கட்டி சிலைவைக்க முற்பட்டபோது அரசாங்க அதிபருக்கு அறிவித்து குச்சவெளி பிரதேச செயலாளரோடு அப்பகுதிக்குச் சென்று மாகாண சபை உறுப்பினர் அன்வரால் தடுத்து நிறுத்தி வைக்கப்படது

12345464_10207728708805339_8465627108722306748_n_Fotor

மேலும் புல்மோட்டை பிரதேசத்தில் கடந்த மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் சுமார் அக்கர் முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான காணிகளை புனித பூமியை புல்மோட்டை பிரதேசத்தில் பிரகடனபடுத்தும் நோக்கில் நில அளவை திணைக்களத்தால் பலமுறை அன்று இருந்த திருமலை மாவட்ட அரச அதிபர் சில்வா தலைமையில் முற்பட்டபோது மாகாணசபை உறுப்பினர் அன்வர் மற்றும் பிரதேச அரசியல் பிரமுகர்கள் மக்களோடு இணைந்து வீதிகளில் இறங்கி ஆர்பாட்டம் செய்யப்பட்டு தடுத்து நிறுத்தபட்டது,மாத்திரமன்றி மாகாணசபை அன்வர் உட்பட பிரதேச அரசியல் பிரமுகர்கள் பொலிசாரால் நீதிமன்றத்தில் வழக்குதாக்கல் இருமுறை செய்யப்பட்டு ஒரு வழக்கு தள்ளுபடி செயப்பட்டு இன்னுமோர்வழக்கு தொடர்ந்தும் நடைபெற்றுகொண்டிருக்கிறது

புல்மோட்டைஅரிசிமலை காணி விவகாரமாக கடந்த மஹிந்த வின் ஆட்சியில் அன்று நீதி அமைச்சராக இருந்த ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹகீம் முன்னால் பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர்,ஆகியோர் பாதுகாப்பு அமைச்சில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ,மிலிந்தமொரகொட,முப்படைகளின் தளபதிகள் முன்னாள் ஜான்திபதியின் செயலாளர் லலித் வீரதுங்க,உட்பட பலர் கலந்து கொண்டு பேச்சுவார்த்தையின் பின்னர்

 

01.புல்மோட்டை பொன்மலைக்குடா அரிசிமலை பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணியில் இயங்கி வந்த கடற்படை முகாம் அகற்றபட்டு பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டது

02.திருகோணமலை வெள்ளைமணல் கரிமளையூற்று பள்ளிவாயல் விடுவிக்கப்பட்டு பொதுமக்களிடம் ஒப்படைக்கபட்டது

03.பின்னர் குறித்த பொன்மலைகுடா அரிசிமலை NEHRP நிறுவனத்தால் கட்டிகொடுக்கப்பட்ட மூன்றுவீடுகளையும் விடுவிக்க கடற்படை தளபதிக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டு வழங்கும் தருவாயில் குறித்த அரிசிமலை பிக்குவினாலே தடுத்து நிறுத்தபட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த பிக்கு 2013 ம் ஆண்டு காலபகுதியில் தான் மாத்தறை பிரதேசத்தில் இருந்து வருகை தந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

குறித்த வீடுகள் தொடர்பாக பிரதேச செயலாளர் மற்றும் அரசாங்க அதிபரால் பொது மக்களிடம் கையளிக்கும்படி பல கடிதங்கள் அனுப்பிவைக்கபடுள்ளது

குறித்த பெளத்த பிக்கு தொடந்தும் புல்மோட்டை பிரதேசத்தில் தனது நாடகத்தை நடத்த முயற்சி செய்து வருகிறார் என்பதும் குறிப்பிட தக்கது.

IMG_0323_Fotor

(மாகாண சபை உறுப்பினரின் ஊடக பிரிவு)