அண்மைய வரலாற்றில் உலக சந்தையில் எரிபொருளின் விலை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே எரிபொருள் விலை வீழ்ச்சியின் நலன்களை நாட்டு மக்களுக்கு வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த அரசாங்கம் உலக சந்தையில் ஏற்பட்ட எரிபொருள் விலை வீழ்ச்சிக்கு அமைய மக்களுக்கு நலன் வழங்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
அன்று இவ்வாறு குற்றம் சுமத்திய தரப்பினர் அதனைவிடவும் விலை குறைந்துள்ள நிலையில் ஏன் எரிபொருட்களின் விலைகளை குறைக்கவில்லை?
பெற்றோலிய வள அமைச்சர் எரிபொருள் விலைப் பொறிமுறைமை ஒன்றை அறிமுகம் செய்வதாக அறிவித்த போதிலும் இதுவரையில் அவ்வாறான ஓர் பொறிமுறைமை அறிமுகம் செய்யப்படவில்லை.
விலை குறைந்துள்ள நிலையில் பொறிமுறைமை ஒன்றை உருவாக்கி எரிபொருட்களின் விலைகளை குறைக்க வேண்டும்.
அவ்வாறு அன்றி விலை அதிகரிக்கும் போது விலைப் பொறிமுறைமை அறிமுகம் செய்வதில் பயனில்லை.
உலக சந்தையில் தற்போதைய விலை வீழ்ச்சியை கருத்திற் கொண்டால் சுமார் 30 வீதத்தினால் இலங்கையில் எரிபொருட்களுக்கான விலையை குறைக்க முடியும் என பிரசன்ன ரணதுங்க சிங்கள பத்திரிகையொன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார்.